திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் நடப்பாண்டில் சனிப்பெயர்ச்சி இல்லைஎன அறிவித்துள்ள கோவில் நிர்வாகம் அடுத்த ஆண்டு மார்ச் 6ஆம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் என தெரிவித்துள்ளது.அன்றைய தினம் காலை 8.24 மணிக்கு சனீஸ்வர பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பிரவேசிக்க உள்ளதாக பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்வில் அறிவிக்கப்பட்டது. சனிப்பெயர்ச்சியின் போது உலகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்