தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலங்குறிச்சியில் வீரசக்க தேவி ஆலய விழாவையொட்டி ஜோதி ஊர்வலம் நடைபெற்றது. வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை வளாகத்தில் உள்ள அவரது குலதெய்வமான வீர சக்கதேவி ஆலயத்தின் 69 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு நெல்லை, திருச்சி, கோவில்பட்டி, திருச்செந்தூர், தேனி, விருதுநகர், சிங்கிலிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஜோதி ஆட்டம் பாத்துடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. திருவிழாவையொட்டி கட்டபொம்மன் கோட்டை வளாகம் முழுவதும் மின்விளக்குகள் அலங்கரிக்கப்பட்டிருந்தது.