திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபம் மற்றும் பௌர்ணமி தின உண்டியல் வருவாயாக 2 கோடியே 83 லட்சம் ரூபாய் பெறப்பட்டுள்ளது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் சுமார் 200 பேர் ஈடுபட்ட நிலையில், 164 கிராம் தங்கம், 1020 கிராம் வெள்ளியும் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது.