தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பான தேடுதல் குழு விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள அண்ணாலை, முறைகேடுகள் தவிர்ப்பதே ஆளுநரின் நோக்கம் என விளக்கம் அளித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ஆளுநர் ஆர்.என்.ரவி வந்த பிறகு துணைவேந்தர் நியமனம் வெளிப்படையாக நடைபெறுவதாக கூறினார். இது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் தான் அரசியல் செய்வதாக தெரிவித்தார்.