எம்ஜிஆர் உடன் பிரதமர் மோடியை ஒப்பிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், மலையுடன் மடுவை ஒப்பிடுவது போன்றது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மோடியுடன் எம்ஜிஆரை ஒப்பிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிவிட்டதற்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.