தஞ்சை பெரிய கோயிலில் உள்ள பெருவுடையாருக்கு ஆயிரம் கிலோ சாதத்தால், அன்னாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, பெருவுடையார் திருமேனியில், காய்கறி உள்ளிட்டவைகளை கொண்டு சமைக்கப்பட்ட ஆயிரம் கிலோ சாதம் சாத்தப்பட்டு, அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில்,ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து, சுவாமிக்கு சாத்தப்பட்ட அன்னம், பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.முன்னதாக, வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய், மாங்காய், பூசணிக்காய், சுரைக்காய், முட்டைகோஸ், கேரட், ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு உள்ளிட்ட 500 கிலோ காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், மலர்களால் அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையும் பாருங்கள் - 1000 கிலோ சாதத்தில் அன்னாபிஷேகம் #thanjavur #bigtemple