கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற அன்னாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதனையொட்டி, ஆயிரம் கிலோ அரிசி கொண்டு அன்னம் தயார் செய்து, அதனை வைத்து சிறப்பு பூஜை செய்து பின்னர் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில், ஆண்டுதோறும் ஐப்பசி அஸ்வினி நட்சத்திர தினத்தன்று அன்னாபிஷேகம் வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டு அன்னாபிஷேகத்தை முன்னிட்டு, ஆயிரம் கிலோ அரிசியால் அன்னம் தயாரிக்கப்பட்டு, அன்னத்தினால் மூலவர் லிங்க திருமேனியில் சாற்றும் அன்னாபிஷேக வைபவம் நடைபெற்றது. இதேபோல, சரக்கொன்றை நாதருக்கு அன்னாபிஷேகமும் நடந்தது. அன்னாபிஷேகத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டு, லிங்க திருமேனியில் சாத்தப்பட்ட அன்னம், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.