அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கோவை மாவட்டம் பொள்ளாட்சி சப் கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என்று மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து சப் கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.