நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் 3 மாதங்களுக்கு பிறகு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. 57 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 53 கிராம் தங்கம் மற்றும் 273 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.