கோவை மாவட்டம் ஆனைமலையில் ஆர்ப்பரித்து ஓடும் பாலாற்றின் மையப்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் சிக்கிய காவலாளிகளை ஆற்றை கடந்து சென்று தீயணைப்புத்துறையினர் மீட்டனர். ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில் சிற்றோடைகள் மற்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாலாற்றின் நடுவே உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் வெள்ளம் சூழ்ந்து காவலாளிகள் மகாலிங்கம், ஜெயகுமார் சிக்கிக்கொண்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சென்ற தீயணைப்புத்துறை வீரர்கள் கயிறு கட்டிக்கொண்டு இருவரையும் மீட்டனர்.இதையும் படியுங்கள் : வீட்டின் முன் நின்ற பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்கள்