உயிரிழந்த தவெக நெல்லை மாவட்ட செயலாளர் சஜி-க்கு சென்னை துறைமுகத்தில் தவெகவினர் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. சென்னையில் இருந்து நெல்லை சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு சஜி உயிரிழந்தார். அவரது உடலுக்கு தவெக தலைவர் விஜய், பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சஜிக்கு தவெக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கிழக்கு மாவட்ட இளைஞரணி பொருளாளர் துறைமுகம் ராஜேஷ் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டு, நீர்மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.