நவீன காலத்திலும், உருளை மூலம் குடிநீரை இறைக்கும் அவலம் நீடிப்பதாக கூறும் பெரம்பலூர் மாவட்டம் வரகூர் கிராம மக்கள், கிராமத்திற்கு பைப் லைன் அமைத்து கொடுத்து முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.வரகூர் கிராமத்தில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அங்கு, இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் குடிநீர் குழாய் இணைப்புகள் இருந்தும் குழாயில் தண்ணீர் வருவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தினமும் சில கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கிணற்றிலிருந்து கயிறு மூலம் குடிநீரை இறைத்து பயன்படுத்தி வருவதாக வேதனை தெரிவிக்கும் கிராம மக்கள் தங்களுக்கு சாலை வசதி அமைத்து தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.