மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் திட்ட அலுவலரை கண்டித்து அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் சிவகங்கை ஆட்சியரக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 10 ஆண்டுகள் பணிமுடித்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு 2023ஆம் ஆண்டு வழங்க வேண்டிய பதவி உயர்வை வழங்காமல் இழுத்தடிப்பதாக குற்றம்சாட்டினர்.