சிவகங்கை நகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 3 அங்கன்வாடி மையங்களும், அடிப்படை வசதிகளின்றி இயங்கி வருவதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அனுப்ப தயங்குகின்றனர். தெப்பக்குளம் அருகே இயங்கி வரும் அங்கன்வாடி மையம், புல், புதர்கள் மண்டி ஆபத்தான வகையில் காணப்படுவதோடு, ஆசிரியர் இல்லாமல் வயதான பெண் பராமரிப்பாளர் ஒருவர் மட்டுமே பணியில் இருந்து வருகிறார். அதேபோல் எஸ்.பி.ஐ வங்கி அருகே அமைந்துள்ள அங்கன்வாடி, குழந்தைகளுக்கான கழிவறைகள் சேதமடைந்தும், மின்விளக்குகள், மின்விசிறி, குடிநீர், கரும்பலகை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றியும் இயங்கி வருகிறது.