கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகளாகியும் திறக்கப்படாமல் உள்ள அங்கன்வாடி கட்டிடம் சமூக விரோதிகளின் புகலிடமாக மாறியுள்ள நிலையில் குழந்தைகள் பாழடைந்த ரேஷன் கடையின் நடைபாதையில் அமர்ந்து படிக்கும் அவலம் நீடிக்கிறது. தேனி மாவட்டம் அம்மாபட்டி கிராமத்தில் 2022ம் ஆண்டு 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு தற்போது வரை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் சமூக விரோதிகளின் புகலிடமாக அங்கன்வாடி மையம் மாறியுள்ள நிலையில் பயன்பாட்டுக்கு வராமலேயே அதன் ஜன்னல்கள், கதவுகள் உடைந்து காட்சியளிக்கிறது.