கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே இடிந்து விழும் நிலையில், உள்ள கட்டடத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தை அசம்பாவிதம் ஏற்படும் முன் மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கார்குடல் கிராமத்தில் இயங்கி வந்த பழைய அங்கன்வாடி மையம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இதனால் வாடகை வீட்டில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வரும் நிலையில், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் வேறு கட்டடத்திற்கு அங்கன்வாடி மையத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.