விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள அங்காளம்மன் திருக்கோயிலில் பங்குனி மாத ஊஞ்சல் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. ஊஞ்சல் உற்சவ மண்டபத்தில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு உற்சவர் எழுந்தருளிய நிலையில், கோயில் பூசாரிகள் மேளதாளங்கள் முழங்க அம்மனுக்கு தாலாட்டு பாடல் பாடினர்.