உலக பாரம்பரிய வாரத்தையொட்டி மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை இன்று ஒருநாள் மட்டும் கட்டணமின்றி பார்வையிடலாம் என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. இன்று முதல் வரும் 25-ம் தேதி வரை மக்களிடையே சமூக கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.