16 குற்றச்சாட்டுக்கள் குறித்து விளக்கம் அளிக்க கோரி அன்புமணிக்கு விதிக்கப்பட்ட கெடு முடிவடைந்த நிலையில், மூத்த நிர்வாகிகளுடன் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆலோசனையில் ஈடுபட்டார். பாமக நிறுவனத் தலைவர் ராமதாசுக்கு எதிராக செயல்பட்டு வருவது, கட்சிக்கு விரோதமாக தன்னிச்சையாக பொதுக் குழுவை கூட்டியது உள்ளிட்ட 16 குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளிக்க கால அவகாசத்துடன் 3 முறை பாமக தலைவர் அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனிடையே குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்காத நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.