முதலமைச்சர் வெளிநாட்டு பயணம் வெறும் விளம்பரம் என விமர்சனம் செய்திருந்த பாமக தலைவர் அன்புமணிக்கு பதிலளித்துள்ள திமுக எம்பி கனிமொழி, நடக்க முடியாத பல கனவுகளை வைத்திருப்பவர்கள் காழ்ப்புணர்ச்சியால் முதலமைச்சரை விமர்சிப்பதாக பதிலடி கொடுத்துள்ளார்.சிவகங்கை மாவட்டம் ஒக்கூரில் திமுக நிர்வாகியின் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு பல முதலீடுகளை ஈர்த்துள்ளதாக தெரிவித்தார்.