சென்னை பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் பாமக கட்சி நிர்வாகிகளுடன் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். ஈரோடு, திண்டுக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அன்புமணி ராமதாஸ் ஆலோசனை வழங்கினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.