தருமபுரி மாவட்டத்தில் பள்ளியில் ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஷ், காலை உணவின் தரத்தையும் சோதனை செய்தார். பென்னாகரம் தொகுதிக்கு உட்பட்ட குள்ளனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அவர், திறன்மிகு வகுப்பறைகளை பார்வையிட்டார். தொடர்ந்து, காலை உணவு தயாரிப்பதில் ஏற்பட்ட தாமத்துக்கான காரணத்தை தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தவர், மின் மோட்டாரில் இனிமேல் மின்கசிவு ஏற்படாதவாறு சீரமைக்குமாறு பணியாளரிடம் கூறினார். மேலும், காலை உணவு திட்ட பணியாளர்களுடனும் அமைச்சர் கலந்துரையாடினார்.