மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை மதுபோதையில் மர்ம நபர்கள் அடித்து நொறுக்கி அராஜகத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவு 12 மணியளவில் மர்ம நபர்கள் 5-க்கும் மேற்பட்ட கார்கள், ஆட்டோ, சரக்கு வாகனம் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கியதாக ஹவுசிங் போர்டு பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் அங்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.