மதுரை மாநகர் வண்டியூர், சௌராஷ்டிராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை மிரட்டி வாகனங்களை சேதப்படுத்தியும், கடைகளை அடைக்க சொல்லியும் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் அராஜகத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். யாகப்பா நகரை சேர்ந்த இளைஞர் தினேஷ்குமார் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது கால்வாயில் குதித்து உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், தினேஷ்குமாரின் நண்பர்கள் தான் அராஜகத்தில் ஈடுபட்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தப்பியோடிய 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.