கோவை மாவட்டம் வேடப்பட்டி அருகே பெண் ஊழியர்களை சிமெண்ட் கடைக்குள் வைத்து ஷெட்டரை பூட்டி அராஜகத்தில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.வேடப்பட்டி செல்லும் சாலையில் கணேஷ்குமார் - மைதிலி தம்பதியினர் சிமெண்ட் கடை நடத்தி வருகின்றனர்.அந்த கடையில் இருந்து அதிகளவு தூசி வெளியாவதாக கூறி வேடப்பட்டி பாஜக மண்டல தலைவர் பிரபு தொடர்ந்து தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.இந்நிலையில் கடந்த 11ம் தேதி திடீரென கடைக்கு வந்த பிரபு, மைதிலி மற்றும் பெண் ஊழியர்கள் சிலரை கடைக்குள் வைத்து பூட்டியதோடு, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.