மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் திருக்கோவிலில் பழைய தேர் இருந்த இடத்தில் தேர் இடமாற்றம் செய்து பழைய தேர் இருந்த இடத்திற்கு எதிரே தற்போது புதியதாக தேர் செய்யும் இடத்தின் பகுதியில் நிறுத்தபட்டு உள்ளது.கோவிலுக்கு முன் பழைய தேர் நின்ற இடத்தில் புதியதாக செய்யபட்டு வரும் தேர் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது அதற்காக பழைய தேர் என்ற இடத்தில் புதிய தேர் கொண்டு வந்து நிறுத்துவதற்க்கு பிளாட்பார்ம் பணிகள் மற்றும் தேர் நிற்பதற்கு மண்டபம் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். இதனால் இந்த வருடம் சித்திரைத் திருவிழாவில் புதிய தேர் ஓடுவதற்கான பணிகளை விரைந்து முடிப்பதற்கான வேலைகளை செய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். Related Link கும்பகோணம் மாமன்ற கூட்டத்தில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம்