கரூர் பெருந்துயர சம்பவத்திற்கு பிறகு, இரண்டு வாரங்களாக தலைமறைவாக இருந்த, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நேற்று இரவு விஜயை சந்தித்து ஆலோசனை நடத்தினார். சென்னை நீலாங்கரையில் உள்ள விஜயின் வீட்டில் சுமார் 20 நிமிடங்கள் வரை ஆலோசனை மேற்கொண்ட அவர், பின்னர் புதுச்சேரி நோக்கி சென்றதாக சொல்லப்படுகிறது. கரூர் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பலியான சம்பவத்தில் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால், தலைமறைவாக இருந்த அவர், முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற அமர்வில், இரண்டாவது முறையாக மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடதக்கது.