காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் கழிவுநீர் தொட்டி முழுவதும் நிரம்பியதால், வெளியேறும் கழிவுகள் குடியிருப்பு சுற்றி தேங்கியுள்ளதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தோட்டக்காரர் தெருவில் சந்திரா அபார்ட்மெண்ட்டில் உள்ள வீடுகளின் உரிமையாளர்கள் தங்களது வீடுகளை வாடகைக்கு விட்டுவிட்டு வேறு இடங்களில் வசிப்பதாக கூறப்படுகிறது. வாடகைக்கு குடியிருப்பவர்கள் முறையாக பராமரிக்காததால் கடந்த 4 வருடங்களாக அவதிப்படுவதாக தெரிவித்த மற்ற குடியிருப்புவாசிகள், நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.