கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே பெய்த கனமழையல் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 60வயது மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொங்கராயபாளையம் பகுதியில் வசித்து வந்த வனமயிலி என்ற பெண் வீட்டின் உள்ளே இருந்தபோது திடீரென வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகன் வெளிநாட்டில் இருப்பதாலும், கணவர் முதியவர் என்பதாலும் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் நேரில் சென்று குடும்பத்தினருக்கு உதவினார்.