கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட, 72 முதியவரை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஸ்டேஷனரி கடை உரிமையாளரான 72 வயது முதியவர் விஜயகுமார், 8ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது பள்ளி ஆசிரியர்களிடம் கூறவே, அவர்கள் பெற்றோருக்கு தகவல் அளித்தனர். ஆசிரியர்களின் அறிவுறுத்தல் படி பெற்றோர் அளித்த புகாரின் பேரில், முதியவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.