தூத்துக்குடியில் 500 ரூபாய் மாமூல் கொடுக்காததற்காக இரும்பு வியாபாரியை கொலை செய்த மூவருக்கு, ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முத்தையாபுரம் ஊரணி ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த முத்துக்குமார், அதே பகுதியில் இரும்புக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். தூத்துக்குடி எம்ஜிஆர் நகரை சேர்ந்த முருகையா, கருப்பையா மற்றும் சுந்தரவேல்புரத்தைச் சேர்ந்த மாரிமுத்து ஆகியோர், கடந்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி 500 ரூபாய் மாமூல் தர மறுத்ததற்காக முத்துக்குமாரை கொலை செய்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி தாண்டவன், மூவருக்கும் ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.