கோயிலுக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டைவிட்டு சென்ற மனைவி. 10 நாட்களாகியும் வீடு திரும்பாத நிலையில் 11ஆவது நாள் ஆன் செய்யப்பட்ட மனைவியின் செல்போன். செல்போனை கீழே கிடந்து எடுத்ததாக கதைவிட்ட நபர், பெண்ணின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்தது அம்பலம். 50 வயதான பெண்ணை 44 வயதான நபர் கொலை செய்தது ஏன்? கொலைக்கான காரணம் என்ன? கொலையாளி சிக்கினானா?டிசம்பர் பத்தாம் தேதி கோயிலுக்கு போறேனு சொல்லிட்டு வீட்டைவிட்டு போன மனைவி கோட்டியை காணோம்னு பதறுன கணவர், உறவினர்களோட சேர்ந்து பல இடங்கள்ல தேடிருக்காரு. ஆனா, மனைவிய பத்தின எந்த தகவலுமே இல்ல. அடுத்து போலீஸ் ஸ்டேஷன்ல புகார் குடுத்த கணவன், காணவில்லைனு தன் மனைவியோட போட்டோவை சமூகவலைதளங்கள்ல பதிவிட்டதோட, போஸ்டர் அடிச்சும் ஒட்டிருக்காரு.கோட்டியோட செல்போன் எண்ணும் ஸ்விட்ச் ஆப்னு வந்ததால அவங்கள கண்டுபுடிக்கிறதுல சிக்கல் ஏற்பட்ருக்கது. இதுக்குமத்தியில, 11ஆவது நாள் அதாவது டிசம்பர் 21 ஆம் தேதி கோட்டியோட செல்போன் எண் ஆன்ல இருந்துருக்குது. அப்போ, செல்போன் எண்ணை டிரேஸ் பண்ணி பாத்தப்ப, சென்னை எக்மோர் பகுதியில டவர் லொகேஷன் காட்டிருக்குது.அந்த லொகோஷனை பாலோ பண்ணி எக்மோர் வந்த போலீசார், கோட்டியோட செல்போனை கையில வச்சிருந்த மதுரவேல்ங்குற நபரை மடக்கி பிடிச்சிருக்காங்க. இந்த செல்போன் எப்படி உங்க கையில கிடைச்சதுனு போலீஸ் கேட்டப்ப, சாலையில கிடந்ததுனு கதை விட்ருக்காரு மதுரவேல். ஆனா, செல்போனை ஆய்வு பண்ணப்ப அதுல கோட்டியும், மதுரவேலும் சேர்ந்து எடுத்த ஒருசில போட்டோக்கள் இருந்துருக்குது.அதுக்குப்பிறகு மதுரவேலை விசாரணை வளையத்துல கொண்டு வந்தாங்க போலீசார். அந்த விசாரணையிலதான் பல அதிர்ச்சி உண்மைகள் எல்லாமே வெளியவந்துச்சு.எக்மோர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த 44 வயசான மதுரவேல் என்ற ஜான், செங்கல்பட்டு திருப்போரூர் முருகன் கோயிலுக்கு தன் மனைவியோட ஒரு நேர்த்திக்கடன் செலுத்துறதுக்காக வந்துருக்காரு. அந்த கோயிலுக்கு, கோட்டியும் அடிக்கடி போறது வழக்கம். மதுரவேல் மனமுருகி வேண்டிட்டு இருந்தத பாத்த கோட்டி, எங்க இருந்து வந்துருக்கீங்க? என்ன நினைச்சி நேர்த்திக்கடன் செலுத்துறீங்கனு மதுரவேல்கிட்ட சாதாரணமா விசாரிச்சிருக்காங்க.என் மனைவிக்கு உடல்நிலை சரியில்ல, திருப்போரூர் முருகனை வேண்டிக்கிட்டா சரியாகும்னு நிறையபேர் சொன்னதால வந்ததா சொல்லிருக்காரு மதுரவேல். அப்போ, பள்ளிவாசலுக்கும் போங்க, தனக்கு ஒரு பள்ளிவாசல் தெரியும், அங்க அடுத்த வாரம் வாங்கனு சொல்லி தன்னோட போன் நம்பரை குடுத்துருக்காங்க கோட்டி. அந்த செல்போன் நம்பரை வாங்குன மதுரவேல், கோட்டிக்கு தினமும் போன் பண்ணி பேசிருக்காரு.அப்படி பேசுறப்ப, தன்னோட மகன் வேலைவெட்டி எதுவுமே இல்லாம ஊர் சுத்திட்டு இருக்குறதாகவும், அவனுக்கு ஏதாவது ஒரு வேலை பார்த்து குடுங்கனு கேட்ருக்காங்க கோட்டி. சென்னையில நல்ல வேலை பாத்துக் குடுக்குறதா சொன்ன மதுரவேல், தன்னோட இளைய மகனுக்கு நுரையீரல்ல ஒரு பிரச்சனை இருக்குறதாகவும், அதனால தினமும் ஹாஸ்பிட்டலுக்கு போயிட்டு இருக்குறதாகவும் சொல்லி சிறுக சிறுக கோட்டிக்கிட்ட இருந்து ரூபாய் 30 ஆயிரம் வாங்கிருக்காரு.பள்ளிவாசல் கதையில ஆரம்பிச்சி, பணம் குடுக்கல் வாங்கல் வரைபோய் கடைசியில தகாத உறவுல போய் முடிஞ்சிருக்கு. இதுக்கு மத்தியில, கோயிலுக்கு போயிட்டு வர்றதா கணவர்கிட்ட சொல்லிட்டு டிசம்பர் பத்தாம் தேதி வீட்டைவிட்டு கிளம்பி போய்ருக்காங்க கோட்டி.மரக்காணம் பக்கத்துல உள்ள புதுப்பட்டு ஆஞ்சநேயர் கோயிலுக்கு போகலாம்னு பிளான்பண்ணி செங்கல்பட்டுக்கு வந்துருக்காரு மதுரவேல். அங்க இருந்து கோட்டியும், மதுரவேலும் ஆக்டிவா பைக்ல போயிட்டு இருந்துருக்காங்க. தன்கிட்ட இருந்த 30 ஆயிரத்தையும் வாங்கிட்டீங்க, வீட்ல கேக்குறாங்கனு சொன்ன கோட்டி, பணத்த சீக்கிரமா ஏற்பாடு பண்ணி குடுங்கனு கேட்ருக்காங்க. இப்பல்லாம் பணத்த ஏற்பாடு பண்ண முடியாது, ஏதாவது சமாளிச்சிக்கோனு சொல்லிருக்காரு மதுரவேல்.பாதி பணத்தையாவது குடுத்தா தான் வீட்ல பிரச்சனை வராதுனு கோவமா சொல்லிருக்காங்க கோட்டி. அப்போ, டென்ஷன் ஆன மதுரவேல், கோட்டியை ஆபாச வார்த்தையில திட்டிருக்காரு. அதனால், ரெண்டுபேருக்குள்ளயுமே வாக்குவாதம் எல்லை மீறிருக்குது. ஒருகட்டத்துல பொறுமையிழந்த, மதுரவேல் ஆலத்தூர் செல்லாளியம்மன் கோயில் பக்கத்துல பைக்கை நிறுத்திட்டு கோட்டியை அடிக்க ஆரம்பிச்சிருக்காரு.பதிலுக்கு கோட்டியும், மதுரவேலை அடிக்க பாஞ்சிருக்காங்க. அப்போ, கோட்டியை கீழே தள்ளிவிட்ட மதுரவேல் பக்கத்துல கிடந்த பெரிய கல்ல கோட்டியோட தலையில தூக்கிப்போட்டுருக்காரு. அதுல தலை சிதைஞ்சி உயிரிழந்துட்டாங்க கோட்டி. அடுத்து, சடலத்த ஒரு காலி இடத்துல தூக்கிப்போட்டுட்டு எக்மோர் போயிட்டாரு மதுரவேல். போகும்போது கையோட கோட்டியோட செல்போனையும் கொண்டு போயிருக்காரு மதுரவேல். கொலை நடந்து பத்து நாளா செல்போனை ஆன் பண்ணாத மதுரவேல், 11 ஆவது நாள் ஆன் பண்ணிருக்காரு. அப்பதான், போலீஸ் ரவுண்டு கட்டி மதுரவேலை தூக்கி விசாரிச்சிருக்காங்க.செல்போனை கீழே கிடந்ததா கதைவிட்ட மதுரவேலோட நாடகம் போலீஸ்கிட்ட எடுபடல. செல்போன்ல இருந்த போட்டோக்கள் மூலம் சிக்குன மதுரவேல் மொத்த உண்மையையும் ஒப்பிச்சிருக்காரு.பேரன், பேத்திகளை கொஞ்ச வேண்டிய வயசுல தகாத உறவுல இருந்த மதுரவேல் இப்ப சிறையில கம்பி எண்ணிட்டு இருக்காரு. அதேமாதிரி, மகனுக்கும், மகளுக்கும் கல்யாணம் ஆகலயேனு கோயில் கோயிலா சுத்திட்டு இருந்த கோட்டியும் தகாத உறவால உயிரையே இழந்துட்டாங்க.