ஓட்டப்பிடாரம் அருகே ஆடுகளை குளத்தில் குளிக்க வைத்தபோது நீரில் மூழ்கி முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்பு -ஓட்டப்பிடாரம் போலீசார் விசாரணை ஓட்டப்பிடாரம் அருகே குமரெட்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரரெட்டியார் மகன் சண்முகபெருமாள் (65)என்பவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். இவர் தற்போது ஆடுகள் மேய்த்து வருகிறார் . இன்று காலையில் தனது ஆடுகளை குளிக்க வைப்பதற்காக வெள்ளாரம் கிராமத்தில் மேற்கு பகுதியில் அமைந்துள்ள குளத்தில் ஆடுகளை குளிக்க வைத்த போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார்.சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஓட்டப்பிடாரம் தீயணைப்பு துறையினர் மூலம் நீரில் மூழ்கி உயிரிழந்த முன்னாள் ராணுவ வீரர் சண்முகப் பெருமாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Related Link பாதுகாப்பற்ற முறையில் குப்பைகளை கொளுத்தும் நகராட்சி