திருச்சி மாவட்டம் துறையூர் அருகே இறுதி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். ஆலத்துடையான் பட்டியை சேர்ந்த ராசாமணி என்பவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், அவரது இறுதி ஊர்வலத்தின் போது விபத்து நிகழ்ந்தது. அதில், படுகாயம் அடைந்த ஸ்ரீதர் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 10 பேர் படுகாயம் அடைந்தனர்.