திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே வீட்டில் தனியாக இருந்த பொறியியல் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருத்தணி சித்தூர் சாலை கமலா திரையரங்கம் அருகே வசித்து வரும் மணிகண்டன் என்பவருக்கு 4 மகள்கள், ஒரு மகன் உள்ள நிலையில், மூத்த மகள் கலைச்செல்வி திருவள்ளூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். குடும்பத்தினர் வெளியூர் சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த கலைச்செல்வி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.