கல்லூரி மாணவியுடனான காதல் விவகாரத்தில் இன்ஜினியரிங் மாணவரை கழுத்தை அறுத்துக் கொன்ற வழக்கில் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சாவூர் முதலாவது கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இன்ஜினியரிங் படித்து வந்த தஞ்சாவூர் புதுப்பட்டினம் தில்லைநகரை சேர்ந்த மனோஜ்குமார் என்பவர் 2013ஆம் ஆண்டு காணாமல் போனார்.அவரது தந்தை சுகுமாரன் அளித்த புகாரில் விசாரணை நடத்திய போலீசார் வெட்டிக்காடு பகுதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மனோஜ் குமாரின் உடலை மீட்டனர்.இந்த வழக்கில் குற்றவாளிகளான கோபி, பிரசாந்த் ஆகியோருக்கு தஞ்சை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.