தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாத்மா காந்தியின் நேர்மையை போற்றும் வகையில் விற்பனையாளர்கள் இல்லாமல், பொருட்களை எடுத்து கொண்டு, அங்கிருந்த உண்டியலில் பொதுமக்கள் பணத்தை போட்டுச் சென்றனர். உண்மை, நாணயம், நம்பிக்கை நிறைந்த சுதந்திர இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற காந்தி கண்ட கனவை நினைவாக்கும் விதமாக அவரது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 2ஆண்டுகளாக பாபநாசம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஆளில்லாத கடையை நடத்தி வருகின்றனர்.