சென்னை கொடுங்கையூரில் வாகனங்களுக்கு வாட்டர் வாஷ் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர், மின்மோட்டார் இயந்திரத்தை இயக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். கடந்த 2மாதங்களாக வாகனங்களை சுத்தம் செய்யும் வாட்டர் சர்வீஸ் கடையில் பணிபுரிந்து வந்த சண்முகம், சர்வீஸ் செய்வதற்காக தண்ணீர் படிந்த கையோடு மின் மோட்டாரினை இயக்க முற்பட்டதால் மின்சாரம் தாக்கியதாகக் கூறப்படுகிறது.