நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள இருவயல் பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை நாய் குறைத்தால் ஆக்ரோஷமாக மண்ணை தன் மீது தூவி கோபத்தை வெளிப்படுத்திய வீடியோ வெளியாகி உள்ளது. கூடலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள தொரப்பள்ளி, இருவயல் கிராமப் பகுதிகளில் யானை நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந் நிலையில் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் குழுவாக ஈடுபட்டுள்ளனர்.