கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி வனப்பகுதியில் ஆக்ரோஷத்துடன் கம்பி வேலியை உடைக்க வந்த யானையை, வனத்துறையினர் சத்தமிட்டும் பட்டாசு வெடித்தும் மீண்டும் வனப்பகுதிக்கு விரட்டினர். காட்டு யானைகள் அவ்வபோது ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வரும் நிலையில், அதனை தடுப்பதற்காக வனத்துறையினர் கம்பிவேலி அமைத்துள்ளனர். அந்த கம்பிவேலிகளை உடைக்க நீண்ட நேரம் போராடிய யானை, வனத்துறையினர் விரட்டியதால் ஏமாற்றத்துடன் காட்டுக்குள் ஓடியது.