ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த மூதாட்டி ஒருவரை தூய்மை பணியாளர்கள் தரக்குறைவாக பேசியதாக கூறி, அதனை தட்டிக்கேட்ட இளைஞரை மருத்துவமனை பாதுகாவலர்கள் தாக்கி வெளியேற்றியதாக புகார் எழுந்துள்ளது.வடக்கு மூக்கையூரை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் குடும்ப தகராறு காரணமாக தலையில் அடிப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி ஒருவர் தான் வைத்திருந்த தங்க நகை காணாமல் போனதாக அங்கு பணிபுரியும் தூய்மை பெண் பணியாளர்களிடம் முறையிட்டுள்ளார். அப்போது, அவர்கள் மூதாட்டியை தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது. இதனை கிருஷ்ணன் தட்டிக்கேட்டபோது, மருத்துவமனை பாதுகாவலர்கள் அவரை தாக்கியதாக சொல்லப்படுகிறது.