சிவகங்கை மாவட்டம் மேக்காரப்பட்டியை சேர்ந்த முதியவர் தியாகராஜன், தனது சொந்த இடத்திற்கு வரி ரசீது தராத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆட்சியர் அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. முதியவர் கையில் இருந்த பெட்ரோல் கேனை பறித்து போலீசார் ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் அழைத்து சென்றனர்.