பெரம்பலூரில் சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது இருசக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. குன்னம் அடுத்த வயலப்பாடி கீரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் பெரம்பலூரில் உள்ள LIC அலுவலகத்தில் பணம் கட்டுவதற்காக சென்ற போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். தகவல் அளித்தும் சுமார் 1 மணி நேரமாக போலீசார் வரவில்லை எனக்கூறி அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.