மகனும், மகளும் துன்புறுத்துவதாகக் கூறி, தங்களை கருணைக் கொலை செய்யுமாறு மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த முதிய தம்பதியால் பரபரப்பு ஏற்பட்டது. அண்ணாநகர் தேவர்நகர் பகுதியை சேர்ந்த ராமையா - வீரமாகாளி தம்பதி, தங்களது வீட்டுமனையை அபகரிப்பதற்காக இளைய மகள் ஜெயலட்சுமியும், மகன் சந்திரமுத்துவும் துன்புறுத்துவதாக தெரிவித்தனர்.