திருவள்ளூரை அடுத்த சிறுவனூரில் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை 2 லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த லாரியும், சென்னையிலிருந்து அரக்கோணம் பகுதிக்கு டயர் ஏற்றி சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதின. இதில் குருமூர்த்தி என்பவர் ஓட்டி சென்ற லாரியின் முன் பகுதி சேதமாகி அவர் இடிபாடுகளில் சிக்கி கொண்ட நிலையில், தீயணைப்புதுறையினர் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் அவரை மீட்டனர். விபத்தில் காயமடைந்த ஓட்டுநர்கள் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.