சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பாலியல் வன்கொடுமையால் பிறந்த குழந்தையை கழுத்தறுத்து கொல்ல முயன்ற தாயை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இளம்பெண் 17 வயது சிறுமியாக இருக்கும் போது, மகேந்திரன் என்பவரால் வன்கொடுமைக்கு உள்ளானது தெரியவந்தையடுத்து, அவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.