குஜராத்தில் தனியார் கப்பலில் உதவி பொறியாளராக பணிபுரிந்த சீர்காழியை சேர்ந்த இளைஞர் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படும் நிலையில், தனது மகனின் இறப்பில் மர்மம் இருப்பதாக அவரது தந்தை மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 16ஆம் தேதி மகன் இறந்துவிட்டதாக தகவல் வந்த நிலையில், சான்றிதழில் 17ஆம் தேதி என குறிப்பிட்டுள்ளதாக அவர் கூறினார்.