திருவள்ளூர் மாவட்டத்தில் சுடுகாடு பிரச்னை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த போது இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஊத்துக்கோட்டை அருகே வேலகபுரம் கிராமத்தில் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த இரண்டு பிரிவினர்களிடையே சுடுகாடு தொடர்பாக பிரச்னை இருந்து வருவதாக கூறப்படுறது. ஏற்கனவே இருக்கும் சுடுகாட்டிற்கு சாலை அமைத்து தர வேண்டும் என ஒரு தரப்பினரும் தங்கள் தரப்பிற்கு என புதிய சுடுகாடு அமைத்து தர வேண்டும் என்று மற்றொரு தரப்பினரும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.