விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கூட்டேரிப்பட்டுவில் பொதுக் கூட்ட மேடையில் நாதகவினர், திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாதக சார்பில் நடைபெற்ற கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தில், திமுக அரசு மற்றும் முதலமைச்சர் மீது விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. இதற்கு அப்பகுதி திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நாதக நிர்வாகி பேசிக் கொண்டிருந்த போது, திமுக நிர்வாகி மேடையேறி மைக்கை பறித்தார். இதனை அடுத்து இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதையும் படியுங்கள் : நகைக்காக 80 வயது மூதாட்டி கொலை வாயில் துணி வைத்து அடைத்து கொன்ற பயங்கரம்..!