போதை பொருள் விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் குறித்து விரைவாக புகார் அளிக்கும் வகையில், தஞ்சை மாவட்ட போலீஸார் சார்பில், செயலி ஒன்று துவங்கப்பட்டுள்ளது. மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தஞ்சை சரக டிஐஜி ஜியாவுல் ஹக் ”உரக்கக் சொல்” என்ற செயலினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்தார்.